Last Updated:
புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் அமல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் அமல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, அரசு அலுவலகங்களில் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் சாதி சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர்களுக்குப் பள்ளியிலேயே சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். மேலும், கல்வித் துறையின் ரொட்டி, பால் ஊழியர்களுக்கான சம்பளம் 10,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Puducherry (Pondicherry)
March 17, 2025 6:57 PM IST


