Last Updated:
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக சரிந்து, 8 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது 8 கிலோ தக்காளி ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.12.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரிய மார்க்கெட்டில் தக்காளி ரூ.12.50, மிளகாய் ரூ.50, சுரைக்காய் ரூ.30, கோவக்காய் ரூ.30, கொத்தவரங்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.90, மாங்காய் ரூ.60, பாகற்காய் ரூ.70, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.50, புடலங்காய் ரூ.34, உருளைக்கிழங்கு ரூ.30, வெங்காயம் ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.60, வெண்டைக்காய் ரூ.39, முள்ளங்கி ரூ.25, முட்டைக்கோஸ் ரூ.20, பீட்ரூட் ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பாகூரைச் சேர்ந்த விவசாயி சந்திரன் கூறுகையில், “தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளதால் பறிக்கும் கூலி கூட கிடைப்பதில்லை. பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் செலவும் திரும்ப வருவதில்லை. இதனால் தற்போது தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளோம்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
Puducherry (Pondicherry)
Jul 26, 2026 10:32 AM IST


