Last Updated:
ஜப்பானில் சப்போரோவைச் சேர்ந்த 80 வயது பெண், விண்வெளி வீரர் என கூறிய நபரால் ஆன்லைன் மோசடியில் 10 லட்சம் யென் இழந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஜப்பானில் 80 வயது பெண் ஒருவர், தன்னை விண்வெளி வீரர் எனக் கூறிய ஒரு நபரின் வலையில் சிக்கி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜப்பானில் பெண் ஒருவர் ஆன்லைன் மோசடிக்குப் பலியாகி, கோடிக்கணக்கில் பணத்தை இழந்த விசித்திரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜப்பானில் அதிர்ச்சியூட்டும் ஆன்லைன் மோசடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சப்போரோவைச் சேர்ந்த 80 வயது பெண் ஒருவர், தன்னை விண்வெளி வீரர் எனக் கூறிய நபரின் வலையில் சிக்கி, அவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
சமீபத்தில், ‘டிஜிட்டல் அரஸ்ட்’ எனப்படும் வாட்ஸ்அப் மோசடிகள் பெரும் விவாதத்திற்கு உள்ளாகின. அதில், பாதிக்கப்பட்டவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தி, வழக்கை கைவிடுவதாகக் கூறி பணம் பறிக்கப்பட்டது. இப்போது, அதைவிட வினோதமான ஒரு புதிய மோசடி முறை ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கதைப்படி, தன்னை விண்வெளி வீரர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், “நான் விண்கலத்தில் சிக்கிக் கொண்டுள்ளேன், தாக்குதலுக்கு உள்ளானேன், ஆக்ஸிஜன் தீர்ந்து வருகிறது. உயிர் பிழைக்க உடனடியாக பணம் அனுப்புங்கள்” எனக் கூறி அந்தப் பெண்ணை ஏமாற்றி இருக்கிறார். ஆக்ஸிஜன் வாங்க அவசரமாக பணம் தேவைப்படுவதாக அவர் வலியுறுத்தியதால், அந்தப் பெண் அவரை நம்பி பணத்தை அனுப்பிவிட்டார். பின்னர் தான் இது சைபர் மோசடி என்பதும், தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதும் தெரியவந்தது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின் படி, சப்போரோவைச் சேர்ந்த 80 வயது பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் இந்த நபரை சந்தித்தார். தான் பூமியைச் சுற்றி வரும் ஒரு விண்கலத்தில் இருப்பதாகக் கூறிய அவர், தான் உயிருக்கு போராடுவதாகக் கூறி, ஆக்ஸிஜன் வாங்க 10 லட்சம் யென் (சுமார் ரூ.6 லட்சம்) கிரிப்டோகரன்சியாக அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சமூக ஊடகங்களில் நடந்த உரையாடல்களின் மூலம் அந்தப் பெண் அந்த நபரிடம் காதல் உணர்வுகளை வளர்த்துக் கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பலர் இந்த சம்பவத்தை அதிர்ச்சியும், சோகமும் தரக்கூடிய நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ளனர். “இது வெளிப்படையாக நகைச்சுவையாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் பலர் இப்படிப்பட்ட மோசடிகளுக்குப் பலியாகின்றனர்” என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
September 20, 2025 5:35 PM IST
புதுசு புதுசா ஏமாத்துறேங்களேடா.. சோசியல் மீடியாவில் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்


