சிங்கப்பூரில் உயிர்நீத்த புதுக்கோட்டையை சேர்ந்த செந்தூரனின் உடல் இன்று சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு ஊராட்சி, சேர்வகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தூரன், இவர் கிட்டத்தட்ட 10 மாதங்களாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார் என கூறப்படுகிறது.
அவர் பணியில் இருந்த போது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவ.17 அன்று மதியம் 3.35 மணிக்கு, தெங்கா – NO.6 PLANTATION CLOSE இல் உள்ள வேலையிடத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக SCDF கூறியுள்ளது.
அவர் கீழே விழுந்து இறந்தார் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, செந்தூரனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அவரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பிரேத உடல் இன்று மாலை தமிழ்நாடு வந்தடையும் என தமிழ்நாட்டு அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சாலைகளில் உறங்கும் ஊழியர்கள்: “என்ன ஒரு மோசமான பிம்பம்” என வலுக்கும் எதிர்ப்புகள்

