சிங்கப்பூரில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதுகுத்து நிகழ்வுக்கு சிங்கப்பூர் முதலாளிகள் சீர் சுமந்து வந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் புதுக்கோட்டை ஊழியர்… சொந்த வீட்டில் 89 சவரன் தங்க நகைகள் திருட்டு
இந்த நிலையில், ஆறுமுகம் தன் மகன் தரணீஸ்வரன் மற்றும் மகள் லட்சயா ஆகியோருக்கு காதணி விழா ஏற்பாடு செய்திருந்தார்.
சிங்கப்பூரில் கோல்டு பீல்டு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் தள மேலாளராக பணிபுரியும் ஆறுமுகம், காதணி விழாவுக்கு அவசியம் வர வேண்டும் என தன்னுடைய முதலாளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தன்னுடைய ஊழியரின் வார்த்தைக்கு மதிப்பளித்த முதலாளிகள் ஷியாம், எஸ்தர் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தந்தனர்.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது
அப்பகுதியில் உள்ள ஓர் மண்டபத்தில் நடந்த இவ்விழாவுக்கு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன்கள் போல மேள தாளத்துடன் சீர் எடுத்து வந்த முதலாளிகளை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் மூழ்கினர்.
அதோடு மட்டுமல்லாமல், ஆறுமுகத்தின் பிள்ளைகளை தங்களுடைய மடியில் அமரவைத்து காதுகுத்த வைத்து அவர்கள் சிறப்பித்தனர்.
முன்பாக, அவர்களுக்கு சாலை எங்கிலும் பேனர்கள் வைக்கப்பட்டு, வாணவேடிக்கைகளுடன் சாரட் வண்டியில் ஏற்றி மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்
இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை
Photos SS from Tamil News Channels

