Last Updated:
ஐந்து முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதை ‘S.I.M.P.L.E’ எனும் வார்த்தையால் குறிப்பிட்டார்.
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பழைய சட்டத்தில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு, எளிமையான நடைமுறைகளுடன் அனைவருக்கும் புரியும் வகையில் புதிய மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது” தெரிவித்தார்.
ஐந்து முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதை ‘S.I.M.P.L.E’ எனும் வார்த்தையால் குறிப்பிட்டார்.
நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு, சுருக்கமான நடைமுறை மற்றும் வெளிப்படையான தகவல்கள் அடங்கிய வரி சீர்திருத்தக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு கூறி, அதற்கான தீர்மானத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
இதையும் படிக்க: மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி எங்கே? பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி
இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பிய சபாநாயகர் ஓம்பிர்லா, வரும் மார்ச் 10 ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, அன்றைய தேதிக்கு அவையை ஒத்திவைத்தார்.
இதன் மூலம் நடப்பாண்டின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவு பெற்றது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 10ஆம் தேதி தொடங்குகிறது.
February 14, 2025 7:22 AM IST


