Last Updated:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1961 வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது. மேலும் பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக்குழு, அளித்த பரிந்துரைகளின்படி மாற்றம் செய்யப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்வுக்குழு அளித்த 285 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வருமான வரி விதிமுறைகளை புதுப்பித்து சீரமைக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பழைய வருமான வரி சட்டத்தை எளிதாக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
August 11, 2025 7:41 PM IST


