• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடி பாடல் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி. | New Zealand MP Leads Traditional Dance, Rips Up Copy Of Bill In Parliament

GenevaTimes by GenevaTimes
November 15, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடி பாடல் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி. | New Zealand MP Leads Traditional Dance, Rips Up Copy Of Bill In Parliament
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

வைதாங்கி ஒப்பந்தம் – முன்னதாக, 1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ (Treaty of Waitangi) மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு டி பாடி மவோரி ( Te Pati Maori ) கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இளம் எம்.பி. ஹானா பழங்குடி பாடலுடன் மசோதா நகலை கிழித்தெறிந்து அவையின் நடுவே வந்து போராட்ட முழக்கம் எழுப்ப அவருடன் பிற மவோரி எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர்.

அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

ஏற்கெனவே உலகமறிந்த ஹானா! – நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதனிடையே, அங்குள்ள டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் எம்.பி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் ஒருவர். 21 வயதேயான இவர் கடந்த 1853-லிருந்து நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் எம்.பி. ஆனவர் என்ற பெருமையை பெற்றவராவார்.

ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்கின் முதல் நாடாளுமன்ற உரை அவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. தனது பேச்சினுடே மவோரி இனத்தின் போர் பாடலைப் பாடி நாடாளுமன்றத்தை அதிர வைத்தார்.



Read More

Previous Post

இந்திய பொருளாதாரத்தில் தடுமாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் | No recession in Indian economy: RBI Governor

Next Post

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்:ஆணையம் | Makkal Osai

Next Post
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்:ஆணையம் | Makkal Osai

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்:ஆணையம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin