Last Updated:
அறிக்கையில், பெட்ரோல் வாகனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 2028 ஆம் ஆண்டு முதல் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய மின் வாகன கொள்கைக்கான வரைவு அறிக்கையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பெட்ரோல் வாகனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யத் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அன்றிலிருந்து மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று 2027 ஜனவரி முதல் பெட்ரோலில் இயங்கும் ஆட்டோக்கள் பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2030-க்குள் 30 விழுக்காடு பள்ளிப் பேருந்துகள் மின்சார மயமாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு மக்களை மாற்ற ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரையிலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்குப் பேட்டரி திறனைப் பொறுத்து 30 ஆயிரம் ரூபாய் வரையும் எலக்ட்ரிக் கார்களுக்கு ஒரு லட்சம் வரையும் மானியம் வழங்கலாம் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
பழைய பிஎஸ்-4 மற்றும் அதற்கு முந்தைய கார்களை மாற்றி, அதற்கு பதிலாக மின்சார கார்கள் வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
புதிய பெட்ரோல் இருசக்கர வாகன பதிவுக்கு தடை.. 2028 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் நடைமுறைப்படுத்த திட்டம்!


