Last Updated:
இந்த புனித பூமியிலே, எனக்கு உணர்ச்சி பூர்வமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இன்று பாஜக நிறுவன நாள். சக்தி படைத்த, வலுவான பாரதம் வேண்டுமென்று பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
புதிய பாம்பன் பாலம் மூலமாக வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்டவை பெருகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ரூ.535 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்பாண்ட நவீன புதிய பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதார அளவினை இரட்டிப்பு செய்துள்ளது. அதற்கு காரணம் நமது கட்டமைப்பு, ரயில், விமானம், மற்றும சாலை போக்குவரத்து உள்ளிட்டவற்றில் 6 சதவீத வளர்ச்சியை உயர்தியுள்ளோம்.
இந்த தேசத்தின் மெகா திட்டங்கள், பல திட்டங்கள் கொடுத்துள்ளோம், அதில் ஒன்று இந்த செங்குத்து பாம்பன் பாலம். புல்லட் ரயில் திட்டங்கள், வந்தே பாரத், நம்மோ பாரத் திட்டங்கள் போன்றவை ரயில்வே துறையை வளர்த்து வருகிறது.
பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பின் ஒரு தற்செயலான நிகழ்வை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்த பவித்திரமான இடத்திலே நாம் புதிய பாம்பன் பாலத்தின் திட்டத்தை சிலகாலம் முன்பாகத்தான் துவக்கி வைத்தோம். தமிழகத்தில் இருந்து பல தலைவர்களிடம் இருந்து எனக்கு கடிதம் வரும். அந்த கடிதம் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். அதேபோல கையெழுத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். குறைந்தபட்சம் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் வேண்டும்
இந்த பாம்பன் பாலம் சுலப பயணத்திற்கு உதவிகரமாக இருக்கும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் இதனால் பெருகும். எங்களது ஆட்சியில் பாம்பன் பாலம் திறக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்று தெரிவித்தார்.
இந்த புனித பூமியிலே, எனக்கு உணர்ச்சி பூர்வமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இன்று பாஜக நிறுவன நாள். சக்தி படைத்த, வலுவான பாரதம் வேண்டுமென்று பயணித்துக் கொண்டிருக்கிறோம். பல தலைமுறைகள், கடந்து இன்று நாம் நிற்கிறோம். இதில் பாஜகவை தொண்டர்களின் கடின உழைப்பு இருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பை நமக்கு அளித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
April 06, 2025 9:11 PM IST
‘புதிய பாம்பன் பாலம் மூலம் வேலை வாய்ப்பு, வர்த்தகம் பெருகும்’ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பேச்சு


