மத்திய கிழக்கில் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வரவேற்றுள்ளார்.
எகிப்துக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
அதன்போது, வெளித் தலையீடுகளை தவிர்க்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்க பெய்ஜிங் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
சீனா காட்டும் முக்கியத்துவம்
அத்தோடு, அத்தகைய ஏற்பாடு ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
China’s emphasis on fostering common security reflects a principle Iran has long championed.
Regional countries must be taking their future into their own hands, and true stability can only come through a new security architecture that is homegrown. Iran stands ready.— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) September 4, 2026
இது குறித்து ‘X’ தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காலிபாஃப், பொதுப் பாதுகாப்பை வளர்ப்பதில் சீனா காட்டும் முக்கியத்துவம், ஈரான் நீண்ட காலமாக ஆதரித்து வரும் ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகள் இந்த விவகாரங்களை தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

