• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏற்கனவே உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தை
பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசு கொண்டுவருவது போல்
செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


நேற்றையதினம் (28) யாழில் இடம்பெற்ற, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை
பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில், “மாறி மாறி வந்த அரசுகள் எவையாக இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்களும்
கொள்கைகளும் ஒன்று தான் என்பதை அநுர அரசும் இப்போது நிரூபித்து இருக்கிறது.

புதிய சட்டத்தைக் கொண்டு வர முயற்சி


தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உலகத்திடம் மறைப்பதற்காக
அவர்களுடைய காணிகளை இன்னும் விடுவிக்காமல், அரசியல் கைதிகளை இன்னும்
விடுவிக்காமல், அவர்களது நிலங்களில் புத்த விகாரைகளை அமைத்துக் கொண்டு
வரலாற்று வன்முறை ரீதியான நிகழ்வில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு | Sritharan Mp S Allegations Regarding The New Pta


ஏற்கனவே 47 வருடங்களாக இந்த நாட்டிலே நான்கு இலட்சத்திற்கும் அதிகமான
மக்களையும், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும், கோடிக்கணக்கான
சொத்துக்களையும் தமிழ் மக்கள் இழந்திருக்கின்றோம்.

அதனை இன்னமும் தக்க
வைப்பதற்காகவே உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி அரசாங்கத்தை
பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டம் என்ற போர்வையில் புதிய
சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது.

காவல்துறையினருக்கு அதிகாரம் 



புதிய சட்டத்தில் மிக மோசமான இடங்கள் சொல்லப்படுகிறது. பயங்கரவாதம் என்றால்
என்ன என்பதற்கான வரையறை சொல்லப்படவில்லை. ஒன்று கூடுகின்ற உரிமைகள்
மறுக்கப்பட்டிருக்கிறது.

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு | Sritharan Mp S Allegations Regarding The New Pta

சாதாரணமான ஒரு உப காவல்துறை பரிசோதகர் நினைத்தால் ஒன்று
கூடுகின்ற உரிமையை மறுக்கலாம், மக்களை கைது செய்யலாம்.

ஒருவரை கைது செய்தால்
ஜனாதிபதியின் கையொப்பத்தினூடாகவே அவரை தடுப்பு காவலில் வைத்திருக்கலாம் என்ற
நிலை இல்லாமல் ஆக்கப்பட்டு, காவல்துறையினரே அதை செய்யலாம் என புதிய சட்டத்தில்
காணப்படுகிறது.



புதிய சட்டம் என்பது பழைய சட்டத்தைவிட மோசமானது. ஆகவே இந்தச் சட்டத்தை விட
முன்பு இருந்த சட்டம் பரவாயில்லை என எமது மக்கள் உணர்வார்கள். அதன்
அடிப்படையில் பழைய சட்டத்தை தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் இந்த அரச
ஈடுபடுகிறது“ என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

3 கிலோ மெத்தம்பேத்தமைன் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டா தாய்லாந்து ஆடவர் விடுதலை | Makkal Osai

Next Post

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி – Sri Lanka Tamil News

Next Post
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி – Sri Lanka Tamil News

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin