அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக, மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் பேரணி தற்போது நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
பொல்தூவ சந்தியில் ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவு ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
எனினும், போராட்டக்காரர்கள் அந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை பாதுகாப்பு
இதனையடுத்து, பொல்தூவ சந்தி பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலங்கள் தொடர்பான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

