Last Updated:
கார்பரேட் காட்டு ஆட்சி வேண்டாம், தொழிலாளர் நீதி வேண்டும் என்ற ராட்சத பதாகைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தொழிலாளர் சட்டங்களை கண்டித்து நாடாளுன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. 3வது நாள் கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 தொழிலாளர் சட்டக் குறியீடுகளாக மாற்றியதற்கு எதிராக போராடினர்.
நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் கார்பரேட் காட்டு ஆட்சிக்கு வழிவகுக்கும் எனக் கூறி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
மேலும் கார்பரேட் காட்டு ஆட்சி வேண்டாம், தொழிலாளர் நீதி வேண்டும் என்ற ராட்சத பதாகைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Delhi Cantonment,New Delhi,Delhi
December 03, 2025 1:19 PM IST
புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு : நாடாளுன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள்


