விவோ, ஜியோமி, ஒன்பிளஸ், ரியல்மீ நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
விவோ எக்ஸ் ஃபோல்ட்3 புரோ
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ மிகவும் புதிய மற்றும் அதன் பழைய வகை மொபைல்களில் இருந்து மாறுபட்ட புதிய அம்சங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எக்ஸ் ஃபோல்ட்3 புரோ என்னும், மடக்கக் கூடிய(ஃபோல்டபல்) போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெல்லிதான, அதிக வெளிச்சம், மடக்கக் கூடிய டிஸ்பிளே, அதிவேக சார்ஜிங், அதிநவீன கேமரா, செய்யறிவு திறன்(AI), கூலிங் சிஸ்டம், ஸ்னாப் ட்ராகன் புராசஸ்சருடன் 8 வது தலைமுறை ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு சிறந்த மாடல் போனாக தயாராகியுள்ளது.
16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.
இதன் விலை சுமார் ரூ. 1.5 லட்சமாகும்(1,59,999). மாதத்தவணை மூலமாகவும் சலுகை விலையிலும், ஜூன் 13 ஆம் தேதியில் முதல் ஃபிலிப் கார்ட், விவோ இந்தியா இ-விற்பனைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

