
Last Updated:
இந்தச் சோதனை வெற்றி பெற்றால் இருவேறு விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கு இணையச் செய்யும் 4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ புதிய சாதனை முயற்சியை மேற்கொள்ள உள்ளது.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வரும் 30 ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த ராக்கெட்டில் 220 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைக்கோள்கள் இடம்பெற இருக்கின்றன. பூமிக்கு மேலே 470 கிலோமீட்டர் உயரத்தில் இந்த செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு ஒன்றோடு மற்றொன்று இணைக்கும் சோதனையும் நடத்தப்பட இருக்கிறது.
விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஸ்பேஸ் DOCKING எனப்படும் பணியும் நடைபெற இருக்கிறது. இந்திய விண்வெளி மையம் அமைக்கும் சோதனையின் முதல் படியாக இந்த DOCKING தொழில்நுட்பம் கருதப்படுகிறது.
இந்தச் சோதனை வெற்றி பெற்றால் இருவேறு விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கு இணையச் செய்யும் 4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள் மற்றும் கருவிகள் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 24, 2024 7:53 AM IST

