Last Updated:
CB1000F பைக் பிரேம் ஹார்னெட் பைக்கைப் போலவே இருந்தாலும், இதற்கு புதிய சப்ஃப்ரேம் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் உயரம் 795 மிமீ ஆகும், இது ஹார்னெட்டை விட 14 மிமீ குறைவாக இருந்தாலும், சவாரி செய்வதற்கு மிகவும் வசதியாக அமைகிறது.
ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய CB1000F நியோ-ரெட்ரோ மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கானது கிளாசிக் தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையைக் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாடலாக காட்டப்பட்ட இந்த பைக்கானது, தற்போதுள்ள CB1000 ஹார்னெட்டின் அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. மேலும், சவாரி அனுபவத்தை வித்தியாசமாக்கும் வகையில் அதன் எஞ்சின் மற்றும் பிற காம்பௌண்ட்கள் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா CB1000F பைக்கில் 1000 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஹோண்டா அதில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, எஞ்சின் கேம்ஷாஃப்ட், ஏர்பாக்ஸ் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் ஆனது 9000 rpm இல் 123.7 hp பவரையும் மற்றும் 8000 rpm இல் 103 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது CB1000 ஹார்னெட்டை விட சற்று குறைவான சக்தியை வழங்கினாலும், குறைந்த rpm இல் அதிக சக்தியை வழங்குகிறது. அதாவது ஹார்னெட்டில் 11,000 rpm இல் 157 hp பவரையும் மற்றும் 9000 rpm இல் 107 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
CB1000F பைக் பிரேம் ஹார்னெட் பைக்கைப் போலவே இருந்தாலும், இதற்கு புதிய சப்ஃப்ரேம் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் உயரம் 795 மிமீ ஆகும், இது ஹார்னெட்டை விட 14 மிமீ குறைவாக இருந்தாலும், சவாரி செய்வதற்கு மிகவும் வசதியாக அமைகிறது. இந்த டேங்க் ஆனது 16 லிட்டர் எரிபொருளை சேமிக்கும் அளவுக்கு பெரியது, அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளின் எடை 214 கிலோ ஆகும், இது ஹார்னெட் பைக்கை விட 2 கிலோ அதிகம். சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, இது ஷோவாவால் தயாரிக்கப்பட்ட அட்ஜஸ்டபில் சஸ்பென்ஷனைப் பயன்படுத்துகிறது. பிரேக்கிங்கிற்காக, முன் பக்கத்தில் நிசினின் 310 மிமீ டூயல் டிஸ்க்குகளையும், பின் பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்டுள்ளது. டயர் அளவும் ஹார்னெட்டைப் போலவே உள்ளது, அதாவது, முன் மற்றும் பின் டயர் அளவுகள் 120/70-ZR17 / 180/55-ZR17 ஆகும்.
பழைய தோற்றத்தில் இருந்தாலும், இந்த பைக் சமீபத்திய தொழில்நுட்பத்தால் நிரம்பியுள்ளது. இது 5 இன்ச் TFT டிஸ்ப்ளே, முழு LED லைட்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. சவாரி செய்வதை எளிதாக்க, இது ஸ்போர்ட், ஸ்டாண்டர்ட் மற்றும் ரெயின் ஆகிய மூன்று சவாரி மோட்களை கொண்டுள்ளது, அத்துடன் எஞ்சின் சக்தி, எஞ்சின் பிரேக்கிங் மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் ஆகியற்றை கொண்டுள்ளது. மேலும் இது டூயல் சேனல் ABS உடன் வருகிறது. ஹோண்டா CB1000F பைக்கானது சில்வர்/ப்ளூ, சில்வர்/பிளாக் மற்றும் பிளாக்/ரெட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஐரோப்பாவில் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஜப்பானில் இதன் விலை 13,97,000 யென் (தோராயமாக ரூ. 8.11 லட்சம்) ஆகும்.
October 16, 2025 8:41 AM IST


