Last Updated:
டென்னிஸ் பந்தை பயன்படுத்தி கிரிக்கெட் லீக் டி10 என்ற போட்டித் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் தோழி புதிய கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் யுஸ்வேந்திர சாஹல். இவர் பிரபல மாடலான தனஸ்ரீ என்பவரை காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். 5 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த அவர்கள் சமீபத்தில் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து ஆர்.ஜே. மஹ்வாஷ் என்பவருடன் சாஹல் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக கிரிக்கெட் மேட்ச்சுகளை பார்வையிட்டனர். இதனால் இருவரும் விரைவில் திருமணம் முடிக்கலாம் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.ஜே. மஹ்வாஷ் கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். டென்னிஸ் பந்தை பயன்படுத்தி கிரிக்கெட் லீக் டி10 என்ற போட்டித் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது.
ஏலத்தில் பங்கேற்ற புகைப்படங்களை மஹ்வாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
August 02, 2025 8:52 PM IST