சென்னை: தங்கம் விலை 2-வது நாளாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.68,080-க்கு விற்பனை விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.67,400-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து, ரூ.8,510-க்கும், ஒரு பவுன் ரூ.68,080-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.74,264-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, நேற்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.114-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,14,000 ஆக உள்ளது.