இந்த நிலையில், புதிய உச்சமாக தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக அதிரடியாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கும், கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.9,380-க்கு விற்பனை.
ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில், இன்று அதிரடியாக பவுன் ரூ.75,000 கடந்து விற்பனையாகி வருவது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.129-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயா்ந்து ரூ.1.29 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.