நடுத்தர அளவிலான தொலைவு வரை சென்று தாக்கும் புதிய அதிநவீன ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை வட கொரியா நேற்று(03)சனிக்கிழமை சோதனை செய்துள்ளது.
வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வான்சானில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 700 கி.மீ.க்கும் அதிகமான தொலைதூரம் சென்று, ஜப்பானின் பிரத்யேக பொருளாதார வலயத்துக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் விழுந்துள்ளது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் நேரடி மேற்பாா்வையில் சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை குறித்து அவரின் சகோதரி கிம் யோ ஜோங் கூறியதாவது:
பறக்கும்போதே திசையை மாற்றும் ஆற்றல்
அமெரிக்க நட்பு நாடுகள் இந்த ஏவுகணை பறக்கும் பாதையைத் துல்லியமாகக் கண்காணிக்கத் தவறிவிட்டன. ஏனெனில், தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி, ஊடுருவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த உயரத்தில் பறக்கும்போதே திசையை மாற்றும் ஆற்றலையும், குறிப்பிட்ட ஏ.ஐ. தொழில்நுட்பத் திறன்களையும் கொண்டுள்ளதால் இதை இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம் என்றாா்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

