எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மரணம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு பிரிட்டன் சம்மன் அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி அதிபர் புதினின் ஊழல் குறித்து தொடர்ச்சியாக பொதுவெளியில் பேசிவந்தார். அவரது பேச்சுக்கள் புதின் அரசுக்கு எதிராக மக்களை வீதியில் இறங்கி போராட வைத்தது.
2020ஆம் ஆண்டு, விமான பயணத்தின் போது நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் விஷ அமிலம் செலுத்தப்பட்டு நவால்னி தாக்குதலுக்கு உள்ளானார். அதற்கு ஜெர்மனியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அச்சுறுத்தல்களைத் தாண்டி 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ரஷ்யாவுக்குள் நுழைந்தார்.
அப்போது நவால்னியை புதின் அரசு பல்வேறு வழக்குகளில் கைது செய்தது. இதனையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அலெக்ஸி நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சைபீரியாவில் உள்ள ஆர்டிக் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சிறையில் அலெக்ஸி நவால்னி உடல்நல குறைவால் உயிரிழந்ததாக ரஷ்ய அரசு அறிவித்தது.
அலெக்ஸி நவால்னியின் உயிரிழப்பு புதினால் நிகழ்த்தப்பட்ட அரசியல் படுகொலை என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், நவால்னி மரணத்திற்கு ரஷ்யா முழு பொறுப்பு என்பதை தெளிவுபடுத்துவதற்காக ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு பிரிட்டன் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…