Last Updated:
நீதிபதிகள் நிலே விபின்சந்திர அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் ஷரச்சந்திர சந்தூர்கர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.
நீதிபதிகள் நிலே விபின்சந்திர அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் ஷரச்சந்திர சந்தூர்கர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து, மூத்த நீதிபதி அபய் எஸ்.ஓகா கடந்த 24ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆகக் குறைந்தது. மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில், மூன்று காலியிடங்களை நிரப்ப கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்குக் கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேஹ்வால் அனுப்பிய நிலையில், அவர் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, மூன்று நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். டெல்லியில் நடைபெற்ற விழாவில் மூன்று நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாய் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள்… பதவிப் பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்


