எனவே இவற்றை மனதில் வைத்துக் கொள்ளாமல் வருமான வரி தாக்கல் செய்வதால் ரீஃபண்டுகள் பெறுவதில் தாமதம், AIS உடன் ஒத்துப்போகாமல் இருப்பது அல்லது வரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆகையால் புதிதாக செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய வரி விதிப்பு முறை டிஃபால்ட் செய்யப்பட்டுள்ளது:
வருமான வரி தாக்கல் செய்யும்போது நீங்களாக மாற்றம் செய்யும் வரை டீஃபால்ட் ஆக உங்களுக்கான வரி விதிப்பு முறை என்பது புதிய வரி விதிப்பு முறையாக நியமிக்கப்பட்டிருக்கும். இதில் குறைவான உச்சவரம்பு விகிதங்கள் இருந்தாலும் அதே சமயத்தில் பல்வேறு விலக்குகள் நீக்கப்பட்டுள்ளது. பழைய வரி விதிப்பு முறையின் கீழ் 80C, HRA அல்லது LDA போன்ற விலங்குகளை பயன்படுத்துவதற்கு நீங்கள் 10-1EA படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். அதனை செய்ய தவறினால் உங்களுடைய விலக்குகளை நீங்கள் இழக்க நேரிடும்.
புதிய வரி விதிப்பு முறையின் கீழ் நிலையான டிடக்ஷன் என்பது 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது:
மாத வருமானம் மற்றும் பென்ஷனர்களுக்கு ஒரு சிறந்த நிவாரணமாக புதிய வரி விதிப்பு முறையின் கீழ் நிலையான டிடக்ஷன் என்பது 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
7 லட்ச ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டு செலவுகளுக்கு 20% TCS:
வெளிநாட்டு பண பரிமாற்றங்கள் மற்றும் பயணங்கள் சம்பந்தப்பட்ட புக்கிங்களுக்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் போது அதற்கு 20% TCS செலுத்த வேண்டி இருக்கும். கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு குறைந்த விகிதங்கள் கிடைத்தாலும், அதற்கு சரியான ஆவணங்கள் தேவை.
ஊகிக்கப்பட்ட வரி விதிப்புக்கான அதிகரித்த வருவாய் வரம்புகள்:
ஃப்ரீலான்சர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களுக்கு இந்த விதி மாற்றம் நன்மை தருகிறது. தொழில்களுக்கான பிரிவு 44AD இன் கீழ் உச்சவரம்பு என்பது இப்போது 3 கோடி ரூபாயாக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்தொழில் வல்லுனர்களுக்கு பிரிவு 44ADAன் கீழ் 75 லட்ச ரூபாயாக நியமிக்கப்பட்டுள்ளது.
ITR ஐ AIS மற்றும் TIS உடன் இணைத்தல்:
உங்களுடைய வருமானத்தை சரி பார்ப்பதற்கு வருமான வரித்துறையானது AIS மற்றும் TIS போன்ற தகவல்களை அதிகம் நாடுகிறது. இதில் உங்களுடைய மாத சம்பளம், மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் மற்றும் கிரெடிட் கார்டு செலவுகள் போன்றவை அடங்கும். உங்களுடைய ரிட்டனில் நீங்கள் வழங்கிய தகவல் மற்றும் AIS இல் உள்ள தகவல் ஒத்துப்போகாத பட்சத்தில் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் அல்லது ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஆகலாம்.
மூலதன ஆதாய அறிக்கையிடல் சொத்து சார்ந்ததாக இருக்க வேண்டும்:
பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், நிலம், பான்டுகள் போன்ற ஒவ்வொரு வகையான சொத்துக்களுக்கும் தனித்தனியாக மூலதன ஆதாய அறிக்கையிடல் செய்ய வேண்டும். சொத்துக்களை நீங்கள் பெற்ற தேதி, அதற்கான செலவு மற்றும் விற்பனை மதிப்பு ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.
புதிய ரிட்டன்களுக்கு கூடுதல் செலவு:
மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்து 24 மாதங்களுக்குள் மாற்றம் செய்யப்பட்ட ரிட்டனை பிரிவு 139 8(A) இன் கீழ் இப்போது நீங்கள் சமர்ப்பிக்கலாம். ஆனால் இரண்டாவது வருடத்தில் வருமான வரியை தாக்கல் செய்யும்போது நிலுவையில் உள்ள தொகைக்கு கூடுதலாக 50 சதவீத வரியை நீங்கள் செலுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் மாற்றம் செய்யப்பட்ட ரிட்டனில் கூடுதல் ரீஃபண்டுகளை கிளைம் செய்ய முடியாது.
PAN-ஆதார் இணைப்பது கட்டாயம்:
உங்களுடைய பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் PAN நம்பர் செயலற்றதாக கருதப்படும். மேலும் உங்களுடைய ITR ஏற்றுக் கொள்ளப்படாது. TDS கிரெடிட் கார்டு மற்றும் ரீஃபண்டுகள் நிறுத்தி வைக்கப்படும். PAN மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு நீங்கள் அதனை செய்யும்போது 1000 ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டும்.
July 31, 2025 11:23 AM IST