புடின் கேட்ட அந்த ஒரு விஷயம்..! டீசலுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாரான டிரம்ப்.. கடுப்பான ஐரோப்பா!
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரமே பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் வேளையில் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி டீசல் கொள்முதலுக்கு அனுமதி பெற்றார். ஆனால் இதற்கு புடின் வைத்த மறைமுக டிமாண்ட் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
ரஷ்யா உடனான ஒப்பந்தம் நடந்த உடன் டிரம்ப் உக்ரைன் அதிபரிடம் இனி ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தக் கூடாது என உத்தரவிட்டார், மேலும் இரு நாடுகளுக்கும் Energy Ceasefire அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த உத்தரவை மீறினால் உக்ரைனுக்கு இன்டலிஜென்ஸ் உதவிகளை நிறுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இந்த பிரச்சனை இரண்டு நாட்களாக வெடித்து வரும் வேளையில் தற்போது டிரம்ப் அரசு புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர் துவங்கிய பின்பு உலக நாடுகளில் இருக்கும் ரஷ்யச் சொத்துக்களை மேற்கத்திய அரசுகள் முடக்கியது எல்லோருக்கும் தெரியும், அப்படி முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை விடுவிக்க அமெரிக்கா அரசு ஆலோசனை செய்து வருவதாக பைனான்சியல் டைம்ஸ் (FT) செய்தி வெளியிட்டுள்ளது.
எதற்காக இந்த முடிவு என்றால், உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான Energy Ceasefire தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதிற்கு அமெரிக்க அரசு சார்பில் ஊக்கத்தொகையாக இந்த 100 பில்லியன் டாலர் தொகையை வழங்க ஆலோசனை நடத்து வருகிறது. இதற்கான பணிகளை தற்போது டிரம்பின் முக்கிய ஆலோசகர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் இந்த முடிவுக்கு ஐரோப்பிய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ரஷ்யாவின் சொத்துக்கள் மீதான தடை மற்றும் முடக்கத்தை எக்காரணத்தைக் கொண்டு விடுவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் அமெரிக்காவுக்கு மலிவு விலையில் எரிபொருள் குறிப்பாகப் பணவீக்கத்தை வேகமாகக் குறைக்க டீசல் சப்ளையை அதிகரிக்க, அமெரிக்க அரசு கடுமையான கண்காணிப்பிலும், முடக்கத்திலும் வைத்திருந்த Shadow Fleet மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்த முடிவு செய்ததுள்ளது அமெரிக்க அரசு.
ரஷ்யா, ஈரான், வெனிசுலா-வில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறக் கூடாது என்பதற்காக மறைமுகமாகச் செயல்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் மீது கடுமையாகக் கட்டுப்பாடுகளும், தடையும் விதித்து வந்த அமெரிக்கா, தற்போது தனது டீசல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக எப்படி ஆயினும் பெற வேண்டும் என்பதற்காகப் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த டிரம்ப் அரசு திட்டமிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
