Last Updated:
குஜராத்தில் புடவையால் ஏற்பட்ட தகராறில் மணமகன், மணமகளை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பாவ் நகரில் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக புடவையால் ஏற்பட்ட சண்டையால் மணமகனே மணமகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், பாவ் நகர் அருகே உள்ள தெக்ரி சௌக் நகரின் பிரபுதாஸ் ஏரிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சோனி ஹிம்மத் ரத்தோடு (Soni Himmat Rathod), சஜன் பாரையா (Sajan Baraiya) ஆகிய இருவரும், திருமணம் செய்துகொள்ளாமலேயே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
ஒருகட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். சனிக்கிழமை இரவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திருமணப் புடவை மற்றும் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே வாக்குவாதம் முற்றிய நிலையில் சோனியை சஜன் இரும்புக் குழாயால் தலையில் அடித்து, சுவற்றில் அவரது தலையை வைத்து தாக்கியுள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே சோனி உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் நடைபெற இருந்த 1 மணி நேரத்திற்கு முன்பாக மணமகனாலேயே மணமகள் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
November 16, 2025 9:51 PM IST


