விழாவின் பொறுப்புக் குழு, விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக இதை மேற்கொள்வதாகக் கூறுகிறது
தேசிய தின அணிவகுப்பு தொடர்பான முடிவுகள், புகைமூட்ட நிலைமை மற்றும் காற்றின் தரத்தை கண்காணித்து வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்படும்.
தற்போதைய புகைமூட்டம்(haze) நிலைமை காரணமாக, இந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றவிருந்த உரை நடைபெறும் இடம், கோலாலம்பூரில் உள்ள டத்தாரான் மெர்டேக்காவிலிருந்து Putrajaya International Convention Centre (PICC)க்கு மாற்றப்பட்டுள்ளது.
தேசிய தினம் மற்றும் மலேசியா தினம் 2026 கொண்டாட்டத்திற்கான தகவல் தொடர்பு அமைச்சின் பணிக்குழு வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டும், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வசதியை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு நடைபெறும் இடம் மாற்றப்பட்டாலும், 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தின் உள்ளடக்கத்திலும் அதன் உணர்விலும் எந்த மாற்றமும் இல்லை. மாறாக, இந்த நிகழ்வை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வசதியான சூழலில் நடத்துவதற்கான பொறுப்பான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
“அரசாங்கம் புகைமூட்டம் நிலைமை மற்றும் காற்றின் தரத்தை தொடர்ந்து அவ்வப்போது கண்காணிக்கும்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய தின அணிவகுப்பு தொடர்பான முடிவுகள், தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்த பின்னரும், சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் துறை மற்றும் வானிலை ஆய்வுத் துறையின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டும் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
