
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (05) புகையிரத திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, புகையிரத நிலைய அதிபர் தரம் III க்கு 100 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா மற்றும் திணைக்களத்தின் பிற அதிகாரிகள், அமைச்சின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.பி.விதானகே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

