Last Updated:
நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வியாபாரிகள் ஆகியோரை ஹனி டிராப் மூலம் கவர்ந்து தனிமையில் இருக்கும்போது வீடியோ பதிவு செய்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த தம்பதி போலீசில் சிக்கியது எப்படி?
சமூக வலைதளங்களில் புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு, அதில் தொடர்பு கொள்ளும் நபர்களை தனிமையில் அழைத்து, வீடியோ எடுத்து மிரட்டி இருக்கிறார் ஒரு பெண். கணவனும், மனைவியும் சேர்ந்து நூற்றுக்கணக்கான நபர்களை மிரட்டி, கோடிகளில் பணம் பறித்துள்ளனர். பலரை ஹனி டிராப் வலையில் வீழ்த்தியவர்கள் போலீசில் சிக்கியது எப்படி?
நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வியாபாரிகள் ஆகியோரை ஹனி டிராப் மூலம் கவர்ந்து தனிமையில் இருக்கும்போது வீடியோ பதிவு செய்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த தம்பதி போலீசில் சிக்கியது எப்படி?
தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் ஆரேப்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண் தனது ஆபாச மற்றும் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவந்தார். அந்த புகைப்படங்களை பார்க்கும் நபர்கள் பலர் அதே சமூக வலைதளம் மூலம் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.
அவ்வாறு தொடர்பு கொண்டவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக் கூறி தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்துள்ளார் அந்த பெண். அவர்களிடம் தேனுருக பேசும் அந்தப் பெண், அவர்களுடைய பொருளாதார நிலையை அறிந்த பின்னர் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுடன் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் கணவன், மனைவியுடன் மற்றொருவர் தனிமையில் இருக்கும் காட்சியை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன் பின்னர் கணவன் – மனைவி இரண்டு பேரும் சேர்ந்து அந்த நபரை மீண்டும் தொடர்புகொண்டு நீ மேலும் பணம் கொடுக்காவிட்டால் நீ தனிமையில் இருந்தக் காட்சியை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோம் என்று மிரட்டி பணம் பறித்து இருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இவ்வாறு பணம் பறித்த அந்த தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு, கார், என ஏராளமாக சொத்து சேர்த்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனாலும், அவர்கள் தங்களுடைய ஹனி டிராப் தொழிலை நிறுத்தவில்லை. இந்த தம்பதியின் ஹனி டிராப் வலையில் சிக்கிய கரீம் நகரைச் சேர்ந்த ஒரு வியாபாரியிடம் இருந்து, 10 லட்ச ரூபாய் வரை பணம் பறித்துள்ளது இந்த தம்பதி. வியாபாரியிடம் அதிக பணம் இருப்பதை தெரிந்து கொண்டவர்கள் மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த வியாபாரி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தம்பதியை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அந்த செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ பதிவுகள் இருப்பதை போலீசார் உறுதி செய்து கொண்டனர். அதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது தம்பதிகள் இருவரும் நூற்றுக்கும் மேற்பட்டோரை ஹனி டிராப் வலையில் வீழ்த்தி பெருமளவில் பணம் பறித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
எந்த சூழலிலும் சபலப்பட்டு இதுபோன்ற ஹனிட்ராப் வலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக பதிவிட்டு ஹனிடிராப்… மோசடி தம்பதி சிக்கியது எப்படி…?


