• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புகார் மனு அளிப்பதுபோல் வந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை | Police investigation Attack on Delhi Chief Minister Rekha Gupta

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
புகார் மனு அளிப்பதுபோல் வந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை | Police investigation Attack on Delhi Chief Minister Rekha Gupta
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று நடத்​தி​னார். அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் முதல்​வரிடம் புகார் மனு அளிக்க வந்​தார்.

அவரை காவலர்​கள் சோனை செய்து அனுப்​பினர். மனு அளிக்க முதல்​வர் ரேகா குப்​தாவை நெருங்​கிய அவர் சிறிது நேரம் பேசி​னார். பின்​னர் முதல்​வரை திட்​டிய அவர் திடீரென அவரை கன்​னத்​தில் அறைந்​தார். முதல்​வரை தள்​ளி​விட்​டபின், அவரது தலை முடியை பிடித்​தும் இழுத்​தார். அதற்​குள் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்​கினர். அவர் உடனடி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உறவினர் ஒரு​வரை டெல்லி போலீ​ஸார் கைது செய்​திருந்​த​தாக​வும், அதற்​காக உதவி கேட்டு அவர் டெல்லி முதல்​வரை சந்​திக்க வந்​தார் என சிலர் கூறுகின்​றனர். சிசிடிவி காட்​சிகளை ஆராய்ந்​த​தில், அவர் முதல்​வர் இல்​லத்​துக்கு முதல் நாளே வந்து அங்​குள்ள பகு​தியை ஆய்வு செய்து வீடியோ எடுத்​துள்​ளார். எனவே இது திட்​ட​மிட்ட தாக்​குதல் என தெரிய​வந்​துள்​ளது. அந்த வீடியோ காட்​சிகள் போலீஸ் விசா​ரணைக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த தாக்​குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவுக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர். இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் ஹரிஸ் குராணா கூறுகை​யில், ‘‘இந்த தாக்​குதலை நாங்​கள் கண்​டிக்​கிறோம். இந்த தாக்​குதல் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டதா என விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார். டெல்லி அமைச்​சர் மன்​ஜிந்​தர் சிங் சிர்ஷா கூறுகை​யில், ‘‘முதல்​வரின் பணி​களை எதிர்க்​கட்​சி​யின​ரால் பொறுத்​துக்​கொள்ள முடிய​வில்​லை.

இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் யார் இருக்​கின்​றனர் என விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார். இந்த தாக்​குதலுக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள டெல்லி முன்​னாள் முதல்​வரும், ஆம் ஆத்மி தலை​வரு​மான ஆதிஷி கூறுகை​யில், ‘‘ஜனநாயகத்​தில் வன்​முறைக்கு இடமில்​லை. டெல்லி முதல்​வர் ரேகா குப்​தா​வின் மீதான தாக்​குதல் மிகுந்த கண்​டனத்​துக்​குரியது. குற்​ற​வாளி​கள் மீது டெல்லி போலீ​ஸார் கடும் நடவடிக்கை எடுப்​பர் என நம்​பு​கிறேன்’’ என்​றார்.

நாய்​களை நேசிப்​பவ​ரா? – தாக்​குதல் நடத்​திய ராஜேஷ் சக்​ரி​யா​வின் தாய் பானு கூறுகை​யில், ‘‘எனது மகன் ராஜேஷ் நாய்​களை நேசிப்​பவர். டெல்​லி​யில் தெரு​நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் அடைக்க உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் அளித்த உத்​தர​வால், ராஜேஷ் கோபம் அடைந்​தார். இதையடுத்​து​தான் அவர்​ டெல்​லி சென்​றார்​’’ என்​றார்​.



Read More

Previous Post

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

Next Post

தங்கம் வென்றார் அனந்த் ஜீத் நருகா! | Anantjeet Naruka wins gold in asian shooting

Next Post
தங்கம் வென்றார் அனந்த் ஜீத் நருகா! | Anantjeet Naruka wins gold in asian shooting

தங்கம் வென்றார் அனந்த் ஜீத் நருகா! | Anantjeet Naruka wins gold in asian shooting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin