நகைச்சுவை நடிகரான யோகிபாபு மீது, ‘பட விழாக்களுக்கு வருவதில்லை’ என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், ‘பணம் மட்டும் வாங்கிக்கொள்கிறார். ஆனால் பெரிய படங்கள் தவிர இதர படங்களின் விழாக்களுக்கு வருவதில்லை என்று உங்கள் மீது புகார்கள் கூறப்படுகிறதே…’ என்று கேட்கப்பட்டது.
இதற்கு ‘டென்ஷன்’ ஆன யோகிபாபு, ‘‘இது நடந்து எத்தனை நாட்கள் ஆகிறது? ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சினை இது. அப்போது வந்து என்னிடம் கேட்டிருக்க வேண்டும். இப்போது என்ன நடக்கிறதோ, அதைப்பற்றி மட்டும் கேளுங்கள்.
நான் சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. வளர்ச்சி வந்தால் சில பிரச்சினைகள் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது பிரச்சினைகளை சந்தித்து வருவதால், வளர்ச்சி அடைந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்”, என்று பதிலளித்தார்.




