பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் தகாத சேவையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 28 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.
அவர்கள் 21 முதல் 61 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என்றும் அது கூறியுள்ளது.
பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் சோதனை
பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட், ஜாலான் லயாங் லயாங், பாசிர் பஞ்சாங் சாலை, பூன் லே அவென்யூ, கிரேக் சாலை, ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 71, தாய் செங் அவென்யூ, கிம் யாம் சாலை, ஆர்ச்சர்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தன.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில், காவல்துறை மற்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அதிரடி சோதனையை மேற்கொண்டதில் அந்த 28 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல்
இந்த சோதனை நடவடிக்கையின் போது, ரொக்கம், வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி, இரண்டு சொகுசு கார்கள் மற்றும் 18 ஆடம்பர கைக்கடிகாரங்கள், இரண்டு கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமாக S$610,000 க்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ் ஊழியர்கள் 7 பேரும் இஸ்தானாவுக்கு செல்வது உறுதி: அதிபருடன் உரையாட வாய்ப்பு!
இணையம் வழியாக இந்த விப#Sர தொழிலை இலகுவாக்கிய குற்றச்சாட்டில் 30 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள நபர்களிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சட்டம்
விப#Sர விடுதியை நடத்தும் அல்லது உதவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$100,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் இந்தியர் நாட்டவருக்கு 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை
Photo: Singapore Police Force