Last Updated:
திரும்பிய பக்கம் எல்லாம் சிசிடிவி கேமராக்கள், உள்ளே நுழைய முடியாதபடி இரும்புக் கதவுகள்.. தொட்டவுடன் காட்டிக் கொடுக்கும் அலாரங்கள் இத்தனையையும் மீறி ஒரு திருடன் சிம்பிளாக யோசித்து ஜுவல்லரி கடையை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
பீகாரில் ஜுவல்லரி கடை ஒன்றின் பாத்ரூம் வென்டிலேட்டர் வழியாக கடைக்குள் நுழைந்த திருடன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சோலோவாக வந்து கச்சிதமாக கொள்ளையடித்துச் சென்ற நபர் சிக்குவாரா?
திரும்பிய பக்கம் எல்லாம் சிசிடிவி கேமராக்கள், உள்ளே நுழைய முடியாதபடி இரும்புக் கதவுகள்.. தொட்டவுடன் காட்டிக் கொடுக்கும் அலாரங்கள் இத்தனையையும் மீறி ஒரு திருடன் சிம்பிளாக யோசித்து ஜுவல்லரி கடையை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். சிசிடிவியை ஏமாற்ற சிம்பிளாக 150 ரூபாய்க்கு ஒரு துண்டு.. வெண்டிலேட்டர் ஓட்டை வழியாக உள்ளே நுழைந்த லாவகம்.. என திருடனின் சிம்பிளிசிட்டியைப் பார்த்து வியந்து போய் உள்ளனர் பீகார் போலீசார். யார் அந்த விநோதத் திருடன்.. சிரமப்படாமல் நகைகளை கொத்தாகத் தூக்கிச் சென்றது எப்படி?
ஒரு திருட்டை அரங்கேற்ற வருடக்கணக்கில் திட்டம் போட்டு, மாதக்கணக்கில் தயாராகி, சில ஆயிரங்களாவது செலவு செய்து, அடி பிசகாமல் திட்டப்படி அரங்கேற்றுவது பற்றித்தான் கேள்விப்பட்டிருப்போம்.
அத்தகைய மணி ஹெய்ஸ்ட் புரொபஸர்கள் பெருகி வரும் இந்த காலத்தில், சிம்பிளாக ஒரு துண்டை எடுத்து முகத்தைச் சுற்றிக் கொண்டு ஒரு நகைக்கடைக்கே விபூதி அடித்த நபரின் சிசிடிவி காட்சிகள்தான் தற்போது வெளியாகியுள்ளது. சசாரம் நகர காவல் நிலையப் பகுதியில் உள்ள கிட்னா ஜுவல்லர்ஸ் கடையில்தான் அந்தத் திருட்டு அரங்கேறி இருக்கிறது.
முடிந்தால் கதவை உடைத்துப் பார் என முரட்டு இரும்பில் கடை ஓனர் கதவை உருவாக்கி வைக்க, அதை எல்லாம் பொருட்படுத்தாத அந்த நபர் பாத்ரூம் வெண்டிலேட்டர் வழியாக சிம்பிளாக கடைக்குள் நுழைந்திருக்கிறார்.
மறுநாள் கடைக்கு வந்த ஜுவல்லரி ஓனருக்கு இதயம் எகிறி வெளியே வந்து விழுந்ததுபோல் அதிர்ச்சியில் உறைந்து போனார். யார் பார்த்த வேலை இது என சிசிடிவியை பார்த்த போது தான், அந்த சிம்பிள் திருடனின் சிம்பிள் கொள்ளை தெரியவந்தது.
பீகார் நகைக்கடையின் பாத்ரூம் வென்டிலேட்டர் வழியே நுழைந்து திருட்டு – சோலோவாக வந்து கொள்ளையடித்த நபர் சிக்குவாரா…?


