• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பி.டி. உஷாவின் 42 ஆண்டு சாதனையை தகர்த்த தமிழக வீராங்கனை – யார் இந்த வித்யா ராம்ராஜ்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பி.டி. உஷாவின் 42 ஆண்டு சாதனையை தகர்த்த தமிழக வீராங்கனை – யார் இந்த வித்யா ராம்ராஜ்? | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 29, 2026 6:45 AM IST

400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார்.

News18
News18

400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார்.

20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் ஐச்சி மற்றும் நகோயா மாகாணங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில், வித்யா ராம்ராஜ் பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், பந்தய தூரத்தை வெறும் 54.75 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் அவர் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக 1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில், பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55.42 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். 2023- ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டின் தகுதிச்சுற்றின் போது வித்யா ராம்ராஜ் 55.42 வினாடிகள் என்ற இலக்கை எட்டி உஷாவின் சாதனையைச் சமன் செய்திருந்தார்.

தற்போது 55 வினாடிகளுக்கும் குறைவாகக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வித்யா ராம்ராஜ் பெற்றுள்ளார். 1998-ஆம் ஆண்டு கோவையில் பிறந்த வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்குபவர். வித்யா ராம்ராஜின் இரட்டைச் சகோதரியான நித்யா ராம்ராஜும் (Nithya Ramraj) ஒரு தேசிய அளவிலான தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் கலக்கி வருகிறார். இருவரும் இணைந்து பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

தனிநபர் தடை ஓட்டம் மட்டுமல்லாமல், இந்தியாவின் 4×400 மீட்டர் மகளிர் மற்றும் கலப்பு ரிலே (Relay) அணிகளிலும் இவர் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காகப் பதக்கங்களை வென்று தந்துள்ளார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்துள்ளார் வித்யா. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ரிலே அணியின் முக்கிய வீராங்கனையாகப் பங்கேற்றுள்ளார்.

Read More

Previous Post

636 ஆண்டுகள் பழமையான மசூதி கும்பமேளாவுக்காக இடிப்பு? விடிய விடிய போராட்டம்! உஜ்ஜைனில் பரபரப்பு | Ujjain Shahi Mosque controversy explained: Madhya Pradesh High Court to Hear Plea Over Road Widening

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – Sri Lanka Tamil News

Next Post
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – Sri Lanka Tamil News

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin