Last Updated:
தனது அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் இடம்பெறும் காவ்யா மாறன் தொடர்ந்து அணி வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்
BMW முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரையிலான 4 உயர் ரக கார்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பயன்படுத்தி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.
மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக காவ்யா மாறன் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருந்து வருகிறது.
கடந்த சீசனில் இந்த அணி ஒரு இன்னிங்ஸில் 287 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 286 ரன்கள் குவித்தது. கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.
இதற்கிடையே அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பயன்படுத்தும் கார்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தனது அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் இடம்பெறும் காவ்யா மாறன் தொடர்ந்து அணி வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்திலும் காவ்யா மாறனின் நடவடிக்கைகள் பாராட்டை பெற்றன.
தொடர்ந்து காவ்யா மாறன் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பயன்படுத்தும் 4 கார்களின் மதிப்பு 25 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவ்யா மாறன் rolls royce, bently, ferrari மற்றும் bmw கார்களை அதிகம் பயன்படுத்துகிறார். அவர் பயன்படுத்தும் நான்கு கார்களின் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பென்ட்லி பென்டய்கா EWB மாடலின் விலை ரூ. 6 கோடி, ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டோம் EWB மாடலின் விலை அதிகபட்சமாக ரூ. 12 கோடி, பி.எம்.டபிள்யூ. ஐ7 கார் ரூ. 2.50 கோடி, ஃபெராரி ரோமா கார் ரூ. 3.75 கோடி என சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கார்களை பயன்படுத்துகிறார் காவ்யா மாறன்.
March 26, 2025 7:44 PM IST


