• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் | Bihar Voter List Revision Election Commission reports foreigners in high numbers

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் | Bihar Voter List Revision Election Commission reports foreigners in high numbers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று உறுதி செய்தனர்.

சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல். இது குறித்த விசாரணை உரிய முறையில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேசம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ளவர்களின் பிறப்பிடத்தை வைத்து அந்த மக்களை அடையாளம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அங்கு நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணி அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு சில மாதங்​களே இருக்​கும் நிலை​யில் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்​கியது. ஜூலை 25-ம் தேதிக்​குள் திருத்​தப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

புதிய நடை​முறை​யின்​படி 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்​புச் சான்​று, பாஸ்​போர்ட் போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​துள்​ளது.

இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து காங்​கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிண​மூல் காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிப​தி​கள் சுதான்ஷு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு இடைக்​கால தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், வழக்கை விசா​ரணைக்கு ஏற்​றுக் கொண்​டனர். இந்த வழக்​கில் கடந்த 10-ம் தேதி விசா​ரணை தொடங்​கியது.

மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் கோபால் சங்​கர் நாராயண், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோ​ரும் தேர்​தல் ஆணை​யத்​தின் சார்​பில் முன்​னாள் அட்​டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோ​பால், மூத்த வழக்​கறிஞர்​கள் ராகேஷ் துவிவே​தி, மணீந்​தர் சிங் ஆகியோ​ரும் ஆஜராகினர்.

இருதரப்​பினரும் சுமார் 3 மணி நேரம் தங்​கள் தரப்பு வாதங்​களை முன்​வைத்​தனர். இதன்​பிறகு நீதிப​தி​கள் சுதான்ஷு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி கூறிய​தாவது:

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை மேற்​கொள்ள அரசி​யலமைப்பு சட்​டம் அனு​மதி வழங்​கு​கிறது. இதை நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. ஆனால் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கும் வேளை​யில் சிறப்பு திருத்​தப் பணியை மேற்​கொள்​வது ஏன்? முன்​கூட்​டியே திருத்​தப் பணியை மேற்​கொண்டு இருக்​கலாமே?

தற்​போது எந்த அடிப்​படை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது என்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் விரி​வான விளக்​கம் அளிக்க வேண்​டும்.

ஆதார் அட்​டை, வாக்​காளர் அட்​டை, ரேஷன் அட்​டையை அடை​யாள ஆவணங்​களாக ஏற்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் பரிசீலிக்க வேண்​டும். இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் உரிய விளக்​கம் அளிக்க வேண்​டும்.

தேர்​தல் ஆணை​யம் தனது பதில் மனுவை ஒரு வாரத்​துக்​குள் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். அதன்​பிறகு மனு​தா​ரர்​கள் தங்​களது பதில் மனுக்​களை ஜூலை 28-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய வேண்​டும்.

இப்​போதைய சூழலில் சிறப்பு திருத்​தப் பணிக்கு மனு​தா​ரர்​கள் தரப்​பில் இடைக்​கால தடை கோரப்​பட​வில்​லை. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளலாம். அந்த மாநிலத்​தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட இருக்​கிறது. அதற்​கு முன்​பாக ஜூலை 28-ம்​ தேதி வழக்​கின்​ அடுத்​த வி​சா​ரணை நடை​பெறும்​. இவ்​வாறு நீதிபதிகள்​ உத்​தரவிட்​டனர்.



Read More

Previous Post

இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு – உங்கள் பகுதியில் எப்படி?

Next Post

ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட் | West Indies bowl out Australia for 225 runs in Day-Night Test

Next Post
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட் | West Indies bowl out Australia for 225 runs in Day-Night Test

ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி: பகலிரவு டெஸ்ட் | West Indies bowl out Australia for 225 runs in Day-Night Test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin