• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி | first phase polling today in bihar assembly election in 121 constituencies

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி | first phase polling today in bihar assembly election in 121 constituencies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​திருந்​தது.

இதன்​படி, மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்​ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மெகா கூட்​டணி 61, தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. எனவே, இந்த முதல்​கட்ட தேர்​தல் இரண்டு கூட்​ட​ணி​களுக்​கும் மிக முக்​கிய​மான​தாக உள்​ளது.

முதல் முறை​யாக போட்​டி​யிடும் பிரா​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கூட்​ட​ணிக்​கும் இன்​றைய வாக்​குப்​ப​திவு மிக​வும் முக்​கிய​மான​தாக அமைந்​துள்​ளது. கடந்த முறை, இரண்டு கூட்​ட​ணி​களுக்​கும் இடையி​லான வாக்கு வித்​தி​யாசம் சில ஆயிரம் மட்​டுமே. இதனால் மெகா கூட்​டணி ஆட்சி அமைய வெறும் 12 தொகு​தி​கள் குறைந்​தன. சிராக் பாஸ்​வானின் எல்​ஜேபி தனித்து போட்​டி​யிட்​டிருந்​தது. அக்​கட்​சி​யின் ஒரு எம்​எல்​ஏ​வும் பிறகு முதல்​வர் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளத்​தில் (ஜேடி​யு) இணைந்​தார். அதே​நேரம், இந்த முறை எல்​ஜேபி என்​டிஏவுடன் இணைந்​த​தால் இக்​கூட்​ட​ணிக்கு பிரச்​சினை இருக்​காது என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன.



Read More

Previous Post

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை

Next Post

Tamilmirror Online || நான்காவது இரவில்: அக்கா கணவருடன் புதுப்பெண் ஓட்டம்

Next Post
Tamilmirror Online || நான்காவது இரவில்: அக்கா கணவருடன் புதுப்பெண் ஓட்டம்

Tamilmirror Online || நான்காவது இரவில்: அக்கா கணவருடன் புதுப்பெண் ஓட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin