• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி | Tejashwi Yadav Rs 30k Promise To Counter NDA Poll Outreach To Women

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இந்தியா
Reading Time: 8 mins read
0
பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி | Tejashwi Yadav Rs 30k Promise To Counter NDA Poll Outreach To Women
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார்.

நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்​பில் அண்​மை​யில் சுமார் ஒரு கோடி பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. இதற்கு போட்​டி​யாக ஆர்​ஜேடி முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் புதிய வாக்​குறு​தியை அளித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக பாட்​னா​வில் நேற்று அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பிஹாரில் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி ஆட்சி அமைத்​தால் இளைஞர்​கள், பெண்​கள், விவ​சா​யிகள் பலன் அடை​யும் வகை​யில் பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும். வரும் ஜனவரி 14-ம் தேதி மகர சங்​க​ராந்தி (பொங்​கல்) பண்​டிகையை ஒட்டி, தாய்- சகோ​தரி திட்​டத்​தின் கீழ் பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும். அடுத்த 5 ஆண்டுக்கு ஆண்டுதோறும் இத்தொகை வழங்கப்படும். அதோடு பெண்​களுக்கு மாதந்​தோறும் தலா ரூ.2,000 நிதி​யுதவி வழங்​கப்​படும்.

குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என்று எங்​களது தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளிக்​கப்​பட்டு உள்​ளது. இதை நிச்​ச​யம் நிறைவேற்​று​வோம். மேலும் விவ​சா​யிகளுக்​காக இலவச மின்​சார திட்​டம் செயல்​படுத்​தப்​படும். கடந்த 20 ஆண்​டு​களாக தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஆனால் மாநிலம் இன்​ன​மும் பின்​தங்​கிய நிலை​யிலேயே இருக்​கிறது. இளைஞர்​கள் வேலை தேடி வெளி​மாநிலங்​களுக்கு இடம் பெயர்ந்து வரு​கின்​றனர்.

பிரதமர் நரேந்​திர மோடி குஜ​ராத்​துக்கு முன்​னுரிமை அளிக்​கிறார். அந்த மாநிலத்​தில் புதிய ஆலைகளை தொடங்​கு​கிறார். வாக்​குக்​காக மட்​டுமே அவர் பிஹாருக்கு வந்​துள்​ளார். முதல்​வர் நிதிஷ் குமார் பெயரளவுக்கு மட்​டுமே முதல்​வ​ராக நீடிக்​கிறார். டெல்​லி​யில் இருந்தே பிஹாரை ஆட்சி செய்​கின்​றனர். குஜ​ராத்தை சேர்ந்​தவர்​கள் பிஹாரை ஆட்சி செய்ய அனு​ம​திக்க மாட்​டோம்.

நான் 17 மாதங்​கள் துணை முதல்​வ​ராக பதவி வகித்​தேன். அப்​போது 5 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை ஏற்​படுத்தி கொடுத்​தேன். எனக்கு மீண்​டும் வாய்ப்பு அளித்​தால் வேலை​வாய்ப்​பின்மை பிரச்​சினைக்கு முழு​மை​யாக தீர்வு காண்​பேன்​. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.



Read More

Previous Post

200 மீட்டர் தூரத்திற்கு காரை இழுத்துச் சென்ற ரயில்

Next Post

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்! | team india meets pm narendra modi with womens world cup trophy

Next Post
உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்! | team india meets pm narendra modi with womens world cup trophy

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்! | team india meets pm narendra modi with womens world cup trophy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin