Last Updated:
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விராட் கோலி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்து அசத்தினார்.
புதிய தொழிலில் 40 கோடி ரூபாய் வரை விராட் கோலி முதலீடு செய்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக விராட் கோலி இருந்து வருகிறார்.
இவர் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், 2027 உலக கோப்பை தொடருடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விராட் கோலி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்து அசத்தினார். கிரிக்கெட்டை தவிர்த்து வர்த்தகத்திலும் விராட் கோலி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது தனிப்பட்ட பிராண்டான one8- இல் ரூ.40 கோடி ரூபாய் வரை தற்போது அவர் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஜெர்மன் விளையாட்டு ஆடை நிறுவனமான PUMA உடன் தனது 8 ஆண்டுகள் ஒப்பந்தத்தை விராட் கோலி முடித்துக் கொண்டார். இந்த ஒப்பந்தம் மூலமாகத்தான் அவரது one8 என்ற பிராண்ட் உருவானது.
December 08, 2025 8:27 PM IST


