குடிசையில் பிறந்து மாட மாளிகைகளை ஆண்ட பலரது வெற்றிக்கதைகள் எப்போதுமே உத்வேகம் தரக்கூடியது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் அதையெல்லாம் ஒரு தடையாக கருதாமல் தங்களது கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் வாழ்கையில் வெற்றி பெற்றவர்களாக பலர் நம்முன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் தானுபே குழுமத்தின் (Danube Group) நிறுவனர் மற்றும் தலைவர் ரிஸ்வான் சஜன்.
வெளிநாட்டு வாழ் இந்தியரான ரிஸ்வான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். சாதாரண விற்பனையாளராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய ரிஸ்வான், இன்று துபாயில் வசிக்கும் பணக்கார இந்தியர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலைக்கு இவர் வர முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? அவருடைய உழைப்பு மட்டுமே. .
பில்லியன் கணக்கில் ஆண்டு வருவாயை கொண்டுள்ள இவரது தானுபே குழுமம் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பதோடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் இந்தியாவில் கிளைகளைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மும்பையில் உள்ள சாதரண நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த ரிஸ்வான் சஜன், அவருடைய குடும்பத்திலேயே முதல் தலைமுறை தொழிலதிபர் ஆவார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் வருமானத்திற்காக தெருத் தெருவாக புத்தகங்களையும் பட்டாசுகளையும் விற்பனை செய்து வந்துள்ளார். தன்னுடைய குடும்பத்தை நடத்துவதற்காக வீடு வீடாக பால் விற்பனையும் செய்துள்ளார் ரிஸ்வான்.
ரிஸ்வானுக்கு 16 வயதாக இருக்கும் போது அவரது தந்தை உயிரிழந்தார். இதனால் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு ரிஸ்வானுக்கு வந்தது. இவருடைய மாமா குவைத்தில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார். 1981-ம் ஆண்டு அங்கு விற்பனை பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார் ரிஸ்வான். தன்னுடைய அயராத உழைப்பாலும் புத்திக்கூர்மையாலும் அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்தார். ஆனால் 1991-ம் ஆண்டு நிகழ்ந்த வளைகுடா போர் காரணமாக வேறு வழியின்றி மும்பைக்கு திரும்பினார்.
Also read |
Flipkartm முன்னாள் ஊழியர் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.8,300 கோடி; யார் இவர்?
இதற்கிடையில் 1993-ம் ஆண்டு தானுபே குழுமத்தை தொடங்கினார் ரிஸ்வான். கட்டுமானப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், ரியல் எஸ்டேட் வளர்ச்சி என பல துறைகளில் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டில் தானுபே குழுமம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருவாயை ஈட்டியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பொருளாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள விவரங்களின் படி, ரிஸ்வான் சஜனின் தற்போதைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது இந்திய மதிப்பில் ரூ.20,830 கோடியாகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)