மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) உள்ளிட்ட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவருக்கும் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது
துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் இந்த வழக்க விசாரணை இன்று (01.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

