பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான என்ற சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும் நீதியான விசாரணை நடத்த கோரியும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு பேத்தாழை பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இக் கையெழுத்து நடவடிக்கையானது மாவட்டத்தில் பல இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கோறளைப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ் தெரிவித்தார். R