இதனுடன், SBI டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மிக முக்கியமாக, இந்த விற்பனையில் சாம்சங் கேலக்ஸி S24 FE, சாம்சங் கேலக்ஸி A35 5G, மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன், மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ, போக்கோ F7 5G ஆகியவற்றில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. எனவே, இவற்றை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம்.
அம்சங்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி S24 FE 5G ஸ்மார்ட்போனானது 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் 6.7 இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும், இதில் Exynos 2400e ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.59,999க்கு பதிலாக ரூ.30,999 விலையில் கிடைக்கிறது. அதாவது கிட்டத்தட்ட பாதி விலையில் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸும் அடங்கும்.
சாம்சங் கேலக்ஸி S24 FE ஆனது 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இதில் 10 மெகாபிக்சல் ஃபிரன்ட் கேமராவைக் கொண்டுள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A35 5G ஸ்மார்ட்போனானது 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் 6.6 இன்ச் sAMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும், இதில் Exynos 1380 ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.30,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி A35 ஸ்மார்ட்போனின் விலையானது பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.17,999 விலையில் கிடைக்கிறது.
கேமராவைப் பொறுத்தவரையில், OIS உடன் கூடிய 50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு, 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் முன் கேமரா ஆகியவை அடங்கும். இந்த போனானது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போனானது 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் 6.67 இன்ச் pOLED குவாட் கர்வ்டு டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும், இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 5G ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.22,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5G ஸ்மார்ட்போனின் விலையானது பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.20,999 விலையில் கிடைக்கிறது.
கேமராவைப் பொறுத்தவரையில், 50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு/மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் முன் கேமரா ஆகியவை அடங்கும். இது 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் IP68/IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போனானது, 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் pOLED குவாட் கர்வ்டு டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும், இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ.30,999 ஆகும்.
கேமராவைப் பொறுத்தவரையில், OIS உடன் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ மற்றும் 50 மெகாபிக்சல் முன் கேமரா ஆகியவை அடங்கும். இது 90W வயர்டு டர்போபவர் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்காக IP68/IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, போக்கோ F7 5G ஸ்மார்ட்போனானது 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 3,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனானது 12GB ஜிபி ரேம் மற்றும் 256GB ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும், இதில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ.30,999 ஆகும்.
October 13, 2025 2:15 PM IST
பிளிப்கார்ட்டின் பிக் பேங் தீபாவளி விற்பனை… சிறந்த ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பம்பர் தள்ளுபடிகள்…!

