• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிளாட் வாங்கி வீடு கட்டும் உரிமையாளர் திடீரென இறந்தால் சொத்து என்னவாகும்? பில்டருக்கு யார் பணம் கொடுப்பது? | Homebuyer Dies Before House Is Complete? Who Pays the Home Loan and Builder?

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிளாட் வாங்கி வீடு கட்டும் உரிமையாளர் திடீரென இறந்தால் சொத்து என்னவாகும்? பில்டருக்கு யார் பணம் கொடுப்பது? | Homebuyer Dies Before House Is Complete? Who Pays the Home Loan and Builder?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிளாட் வாங்கி வீடு கட்டும் உரிமையாளர் திடீரென இறந்தால் சொத்து என்னவாகும்? பில்டருக்கு யார் பணம் கொடுப்பது?

சிலருடைய வாழ்நாள் கனவு ஒரு சொந்த வீடு, கார் மற்றும் நிரந்தர வேலை அவ்வளவுதான். இதற்காக லோன் பெற்றாவது வீடு வாங்கி விடுவார்கள். சிலர் பிளாட் வாங்கி அதில் வீடு கட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படி கட்டுமானத்தில் இருக்கும் ஒரு பிளாட்டை வாங்கியவர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் அடுத்து என்ன நடக்கும்? அவருடைய சட்டப்பூர்வ வாரிசு மற்றும் நாமினிகள் செய்ய வேண்டியது என்ன? பில்டருக்கு யார் பணம் செலுத்த வேண்டும்? ஹோம் லோன் பெற்றிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? என்ற முக்கியமான விஷயங்களை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

பிளாட்டை வாங்கியவர் இறந்து விட்டால் அதன் உரிமை யாருக்குச் செல்லும்?: பிளாட்டை வாங்கியவர் இறந்து விட்டால் உடனே அவர் வாங்கிய பிளாட் ரத்தாகி விடாது. வாங்கியவரின் இறப்புக்கு பிறகு அந்த சொத்து யாருக்கு செல்ல வேண்டும் என்பதை அவருடைய குடும்பத்தினர் கட்டுமான நிறுவனத்திடம் சொல்ல வேண்டும். இதற்காக அவர் ஏதாவது உயில் எழுதி வைத்திருக்கிறாரா? யார் சட்டப்பூர்வ வாரிசுகள்? அவர் வாங்கி வைத்திருக்கும் சொத்து தொடர்பாக எந்தெந்த ஆவணங்கள் இருக்கிறது என்ற எல்லா விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

பிளாட் வாங்கி வீடு கட்டும் உரிமையாளர் திடீரென இறந்தால் சொத்து என்னவாகும்? பில்டருக்கு யார் பணம் கொடுப்பது?

பிளாட் வாங்கிய நபர் இறந்தவுடன் அவருடைய குடும்பத்தினர் செய்ய வேண்டியது என்ன?: பிளாட் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கும் நபர் இறந்தவுடன் அவருடைய குடும்பம் எல்லா ஆவணங்களையும் சேகரித்து வைக்க வேண்டும். சேல் அக்ரிமெண்ட், வீட்டை புக் செய்ததற்கான ரசீதுகள், ஹோம் லோன் பெற்றிருந்தால் வங்கி அறிக்கைகள், லோன் ஆவணங்கள், டெத் சர்டிபிகேட் மற்றும் வாரிசு சான்றிதழ் போன்ற எல்லா ஆவணங்களும் தேவைப்படும்.

நாமினி சொத்தின் முழு உரிமையாளராக முடியுமா?: சொத்து தொடர்பான ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதற்காக நாமினி முழுப் பொறுப்பேற்க முடியாது. இதற்கென சில விதிமுறைகள் இருக்கிறது. சொத்தின் உரிமை பொதுவாக இந்திய வாரிசுரிமைச் சட்டம், உயில் மற்றும் பிற சட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். எனவே பிளாட் வாங்கியவர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினர் நாமினி விபரங்களை சரிபார்க்க வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் எந்தச் சிக்கலும் இன்றி இறந்தவருடைய சொத்தை பெற முடியும்.

உயில் எழுதி வைத்திருந்தால் என்ன செய்வது?: இறந்தவர் பிளாட் வாங்குவதற்கு முன்பு உயில் எழுதி வைத்திருந்தால் அதில் யாருக்கு அந்த பிளாட் செல்ல வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றால் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சொத்து பிரித்து வழங்கப்படும்.

இறந்தவர் குறித்து பில்டருக்கு தெரிவியுங்கள்: முதலில் இறந்தவர் குறித்து பில்டருக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் இதை மொபைல் மூலமாக செய்யலாம். அதைவிட நல்லது இமெயில் அனுப்புவது. இது ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமாக இருக்கும். அதன் பின்னர் பில்டர் மாநில விதிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் இறந்தவரின் பெயருக்கு பதிலாக மற்றொருவர் பெயருக்கு சொத்தை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பார்.

ஹோம் லோன் பெற்றிருந்தால் என்ன செய்ய வேண்டும்?: ஹோம் லோன் பெற்ற நபர் இறந்த பிறகு இன்சூரன்ஸ் இருந்தால் பிரச்சனை இல்லை. மீதமுள்ள கடன் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்தும். ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லை என்றால் அவருடைய குடும்பத்தினர் தான் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கும்.

அதுவும் கடன் பெறும்போதே யாராவது ஜாமின் கையெழுத்து போட்டிருந்தால் கடனின் முழு பொறுப்பும் அவரையே சேரும். அதேபோல பிளாட்டை சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பவர்கள் பில்டருக்கு செலுத்த வேண்டிய மீதி தொகையையும் செலுத்தியாக வேண்டும்.

வாரிசுகள் என்ன செய்ய வேண்டும் என்றால் பில்டர் ஒரு புதிய ஆவணம் தயாரித்து அதை உங்கள் பெயருக்கு மாற்றி தருவார். ஆனால் அதில் உடனடியாக கையெழுத்து போடக்கூடாது. இறந்தவர் எவ்வளவு பணம் செலுத்தி இருக்கிறார்? நிலுவைத் தொகை எவ்வளவு இருக்கிறது? டெலிவரி தேதி எப்போது? இறந்தவருக்கு ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தில் இருந்த விஷயங்கள் தான் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளதா? என்ற எல்லா விவரங்களையும் சரிபார்த்துவிட்டு அதன் பின்னரே கையெழுத்து போட வேண்டும்.

Share This Article

Story first published: Sunday, September 27, 2026, 10:39 [IST]

Other articles published on Sep 27, 2026

Read More

Previous Post

நாட்டில் 167 தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒருவருக்கு மட்டுமே SLS தரச்சான்றிதழ்: வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! – Sri Lanka Tamil News

Next Post

DECODE | ஐ.நா. சபையில் நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு… பின்னணி என்ன?

Next Post
DECODE | ஐ.நா. சபையில் நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு… பின்னணி என்ன?

DECODE | ஐ.நா. சபையில் நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு... பின்னணி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin