• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிளாட் ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி… எவ்வளவு தெரியுமா..? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பிளாட் ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி… எவ்வளவு தெரியுமா..? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 16, 2025 1:48 PM IST

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் பரிவர்த்தனைகள் அதிகரிப்பைப் பயன்படுத்திக் கொள்ள உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தயாராகி வருகிறது. ஒவ்வொரு உணவு விநியோக ஆர்டருக்கும் வசூலிக்கப்படும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை நிறுவனம் ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது.

News18News18
News18

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் பரிவர்த்தனைகள் அதிகரிப்பைப் பயன்படுத்திக் கொள்ள உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தயாராகி வருகிறது.

ஒவ்வொரு உணவு விநியோக ஆர்டருக்கும் வசூலிக்கப்படும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை நிறுவனம் ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது. முன்னதாக இது ரூ.12 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆர்டரிலிருந்தும் அதிக லாபம் ஈட்டவும், அதன் லாபத்தை அதிகரிக்கவும் ஸ்விக்கி முயற்சிக்கிறது. ஏப்ரல் 2023 முதல் ஸ்விக்கி பிளாட்ஃபார்ம் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. அப்போது பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.2 ஆகவே இருந்தது. அதன் பின்னர் இந்தக் கட்டணத்தை ஸ்விக்கி படிப்படியாக அதிகரித்து வருகிறது. கட்டண அதிகரிப்பு இருந்தபோதிலும், ஆர்டரில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் ரூ.2 அதிகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு சிறியதாகத் தோன்றலாம். ஆனால் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுக்கு, தினசரி ஆர்டர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், அதன் நிதி நிலையை இது உயர்த்தும்.

ஸ்விக்கியின் கட்டணம் ஏப்ரல் 2023ல் ரூ.2ஆக இருந்தது. பின்னர், படிப்படியாக உயர்ந்து ஜூலை 2024ல் ரூ.6 ஆகவும், அக்டோபர் 2024ல் ரூ.10ஆகவும் அதிகரித்து, இப்போது ரூ.14 ஆக உள்ளது. இந்த நிறுவனம் வெறும் இரண்டே ஆண்டுகளில் இதை 600 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, ஸ்விக்கி ஒரு நாளைக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகிறது. இந்த நிலையில், இந்த கட்டண உயர்வானது, நிறுவனத்திற்கு கூடுதல் வருமானத்தை ஈட்டுகிறது. இருப்பினும் இந்த கட்டண உயர்வு குறித்து நிறுவனம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால் மாதம் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

ஸ்விக்கி நிறுவனத்தின் இழப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,197 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் (Q1 FY25) ஏற்பட்ட ரூ.611 கோடி இழப்பை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். கடந்த காலாண்டில் நிறுவனம் ரூ.1,081 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. நிறுவனத்தின் இழப்புக்கு முக்கிய காரணம் இன்ஸ்டாமார்ட்டில் (விரைவான மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவை) விரைவான முதலீடு மற்றும் விரிவாக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த வளர்ச்சிக்கு இன்ஸ்டாமார்ட் (ஸ்விக்கியின் விரைவான மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவை) குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. இது உணவு விநியோகம் மற்றும் உடனடி வர்த்தகப் பிரிவுகளில் நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்தியது. ஸ்விக்கியைத் தவிர, ஜொமாட்டோவும் முக்கிய நாட்களில் அதன் பிளாட்ஃபார்ம் கட்டணங்களை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஜொமாட்டோ நிறுவனம் ஐந்து முறை கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. இது 400 சதவீத அதிகரிப்பாகும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 16, 2025 1:48 PM IST

Read More

Previous Post

CSK இல்லை.. சஞ்சு சாம்சன் விளையாட இருக்கும் அணி இதுதான்?

Next Post

பரதநாட்டிய நிகழ்ச்சியில் நேரடி இசைக்குழுவின் பங்களிப்பு – Malaysiakini

Next Post
பரதநாட்டிய நிகழ்ச்சியில் நேரடி இசைக்குழுவின் பங்களிப்பு – Malaysiakini

பரதநாட்டிய நிகழ்ச்சியில் நேரடி இசைக்குழுவின் பங்களிப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin