Last Updated:
அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மட்டும் தப்பியோடிய நிலையில், காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
பில்லி சூனியம் செய்ததாகக் கூறி, மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம் பிஹாரில் அரங்கேறியுள்ளது.
பிஹார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்தேவ் மஹ்தோ. இவரது குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதான பாபுலால் ஓரான் என்பவரை ராம்தேவ் மஹ்தோ சிகிச்சைக்காக அணுகியுள்ளார். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்புக்கு பாபுலால் ஓரான் சூனியம் வைத்ததே காரணம் எனக் கூறி, அவரையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் தாக்கியதோடு உயிரோடு வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மட்டும் தப்பியோடிய நிலையில், காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சூனியம் வைத்ததாகக் கூறி, ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
July 08, 2025 7:32 AM IST
பில்லி சூனியம் வைத்தாரா..? ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்..! பிஹாரில் அதிர்ச்சி