ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தையொட்டி ஜாம் நகருக்கு மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ் வருகை தந்துள்ளார். ஆட்டம் பாட்டத்துடன் 3 நாட்கள் கொண்டாட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கி வரும் மார்ச் 3 ஆம் தேதி வரை இவர்களது ப்ரீ வெட்டிங் நடைபெற உள்ளது.
இதன் காராணமாக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1.000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என கோலகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் ஜாம் நகருக்கு வந்துள்ளார். திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தில் முதல் நாளான இன்று ஆட்டம் பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியுள்ளன. பார்ட்டிக்கு தயாரான நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள இன்ஸ்டா கிராம் பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
விளம்பரம்சர்வதேச விருந்தினர்களை அழைத்து வருவதற்காக அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்செல்ஸ், லண்டன், சியோல், கத்தார், பூடான் ஐக்கிய அரபு அமீரகம், பாரிஸ், இத்தாலி உள்ளிட்ட நகரங்கள், நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் ஜாம் நகருக்கு வருவதும் போவதுமாக உள்ளது. போயிங், ஏர்பஸ், எம்ப்ரேயர், பால்கோன்ஸ், கல்ஃப் ஸ்ட்ரீம்ஸ், லியர்ஜெட், லெகஸி, பெனோம், ஹாக்கர்ஸ், சிடாஷன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில் பங்கேற்க ஷாருக்கான், சல்மான் கான், ஜான்வி கபூர், மனுஷி சில்லர், ராணி முகர்ஜி மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் ஜாம்நகருக்கு வருகை புரிந்துள்ளனர். ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ரன்பீர் கபூர், அட்லீ உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
விளம்பரம்தங்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்கு வருகை தந்துள்ளவர்களை வரவேற்று ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் நன்றி கடிதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த பதிவுகளும் வைரலாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…