Last Updated:
இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடன் ஆலோசனை நடத்தினார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலக பணக்காரருமான பில்கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். அதன்படி, ஆந்திர மாநிலம் விஜயவாடா வருகே உள்ள கண்ணவரம் விமான நிலையத்தில் பில் கேட்ஸை ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தலைமையில் அமைச்சர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அமராவதியில் உள்ள தலைமை செயலகத்திற்கு சென்ற அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிலையில், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளில் பில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவது குறித்தும், குறிப்பாக ‘சஞ்சீவனி’ மருத்துவத் திட்டத்தின் வெற்றி குறித்தும் முதலமைச்சரும் பில்கேட்ஸும் விவாதித்தனர். பின்னர் உண்டவல்லி கிராமத்திற்குச் சென்ற பில்கேட்ஸ், அங்கு டிரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நவீன விவசாய முறைகளைப் பார்வையிட்டார்.
தொழில்நுட்பத்தின் மீது தம்மைக் காட்டிலும் அதிக நம்பிக்கை கொண்டவர் சந்திரபாபு நாயுடு எனப் புகழ்ந்துள்ள பில் கேட்ஸ், ஆந்திராவின் இந்த வளர்ச்சிப் பயணம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

