பிலியந்தலை – மஹாரகம பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதுடன், பின்னர் அருகிலிருந்த மின் கம்பத்திலும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் அரவ்வல பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், உயிரிழந்த மாணவனுடன் பயணித்த மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்து தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

