சென்னை,தென்னிந்திய திரைப்பட உலகில் கவர்ச்சியை விட நடிப்புக்கு முக்கியத்துவம் அளித்து தனித்துவமான இடத்தை பிடித்துள்ள நடிகை சாய் பல்லவி மீண்டும் சாதனை படைத்துள்ளார்
மேக்கப் இல்லாமல் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் அவர், சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் விழாவில் ‘அமரன்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இதன் மூலம் தனது திரைப்பயணத்தில் மொத்தம் 7 பிலிம் பேர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி வெளிப்படுத்திய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த சாய் பல்லவி இந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். தற்போது அவர் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார்
